
லைலத்துல் கத்ர் இரவில், புனித மசூதிகளில் 2 மில்லியனுக்கும் அதிகமான வழிபாட்டாளர்கள் தொழுகைகளில் கலந்து கொண்டனர்
புனித ரமலான் மாதத்தின் 27ஆவது நோன்பின் இரவு தொழுகை, தராவீஹ் மற்றும் கியாமுல்லைல் சிறப்பு தொழுகைக்காக மக்கா பெரிய மசூதியிலும், மதீனா நபிகள் நாயகம் மசூதியிலும் 20 லட்சத்துக்கும் மேலான வழிபாட்டாளர்கள் திரண்டனர். சுமார் ஒன்றரை மில்லியன் உம்ரா பயணிகள் மற்றும் வழிபாட்டாளர்கள் தராவீஹ் மற்றும் கியாமுல்லைலின் சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டனர். சவூதி அதிகாரிகள், வழிபாட்டாளர்களின் வருகைக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பெரிய மசூதியின் அனைத்து தளங்களும் அதன் முற்றங்களும் வழிபாட்டாளர்களால் நிரம்பியிருந்தது, மேலும் வழிபாட்டாளர்களின் வரிசைகள் ஹரம் பகுதியின் தெருக்கள் வரை பரவியது. உம்ரா யாத்ரீகர்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் 118 வாயில்கள் வழியாக நுழைந்தனர், உம்ரா பயணிகளுக்காக 3 வாயில்கள், வழிபாட்டாளர்களுக்காக 68 வாயில்கள், அவசரகாலத்திற்காக 50 வாயில்கள் திறக்கப்பட்டது.