உலகம் முழுவதிலுமிருந்து இந்த ஆண்டு ஹஜ் மேற்கொள்ளச் சவூதிக்கு வரும் ஹஜ் பயணிகளுக்கான டிஜிட்டல் அடையாள சேவையை உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளியுறவு அமைச்சகம், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மற்றும் சவூதி டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட பயணிகளுக்கான டிஜிட்டல் அடையாள அட்டை, பயணிகள் தங்கள் அடையாளத்தை மின்னணு முறையில் நிரூபிக்க உதவுகிறது என்றும், பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் செய்கிறது என அமைச்சகம் கூறியது.
பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளில் மிக உயர்ந்த தரமான தரத்தை வழங்குவதன் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





