சவூதி அரேபியா திங்களன்று 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்க்கும் அரசின் விமானப் போக்குவரத்துத் துறைக்கான பொருளாதாரக் கொள்கையை அறிவித்து, பொது மற்றும் தனியார் துறைகளில் இருந்து இந்த முதலீடுகள் திரட்டப்படும் என்று சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) தெரிவித்துள்ளது.
GACA, விமான நிலையங்களுக்குக் கையாளுதல் சேவைகள் ,விமான சரக்கு மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் என மூன்று பொருளாதார விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து, அக். 30 முதல் இவைகள் அமலுக்கு வரும் எனக் குறிப்பிட்டுள்ளது.
GACA தரைவழி கையாளுதல், விமான சரக்குச் சேவைகள் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளுக்கான பொருளாதார விதிமுறைகளையும் வெளியிட்டது, சவூதியில் சேவைகளை வழங்க விரும்புவோர் ‘சந்தைக்குள் நுழைவதற்கான சுதந்திரம்’ என்ற கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்.
மேலும் விமான போக்குவரத்து நிறுவனங்களுக்குப் பொருளாதார உரிமங்களை வழங்குவதற்கான தேவைகளை எளிதாக்குவதன் மூலம் விமான போக்குவரத்தை தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு வணிகம் அல்லாத விமானங்களுக்கான பொருளாதாரத் தேவைகளை ரத்து செய்கிறது.
இது விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சியை அடைவதற்கும் புதுமைகளைச் செயல்படுத்துவதற்கும் கூடுதலாகப் போட்டியைத் தூண்டும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் உள்கட்டமைப்பை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.





