சவூதி அரேபியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்த, சவூதி-கனடிய கல்வி கூட்டாண்மை மன்றம் சவூதி அரேபியாவின் கனேடிய தூதர் ஜீன்-பிலிப் லிண்டோவுடன் சவூதி கல்வி அமைச்சர் யூசுப் அல்-பென்யனால் ரியாத்தில் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்ட சவூதி மற்றும் 40 கனடிய நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
அல்-பென்யான் தனது சமீபத்திய கனடா பயணத்தின் போது அங்குப் பொது மற்றும் உயர்கல்வி, ஆரம்பகால குழந்தைப் பருவத் திட்டங்கள், ஆசிரியர் மற்றும் மருத்துவப் பயிற்சி, மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி போன்ற துறைகளில் ஒத்துழைப்பதற்கான பல வாய்ப்புகளை ஆராய்ந்தார்.
தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, சுகாதாரம், தூய்மையான எரிசக்தி, சுரங்கம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட கல்வி ஒத்துழைப்பின் முக்கியமான பகுதிகளை ஆராய்வதற்கான தளமாக இந்த மன்றம் செயல்படுகிறது என்று தூதர் லிண்டோ குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் இரு நாடுகளிலிருந்தும் கல்வி, சுகாதாரம், கல்வித்துறை மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த சுமார் 180 அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், பல்வேறு முயற்சிகள் மற்றும் கூட்டாண்மைகள் குறித்து கலந்துரையாடும் பல அமர்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





