ரியாத் மற்றும் ரோம் இடையே இத்தாலிய விமான நிறுவனமான ITA வழக்கமான விமானங்களைத் தொடங்கும் எனச் சவுதி பொது விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) அறிவித்துள்ளது. இது சவுதி அரேபியா மற்றும் இத்தாலி இடையே விமானப் பயணத்திற்கான குறிப்பிடத் தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
ஜூன் முதல், சவுதி அரேபியா மற்றும் இத்தாலி இடையே விமான இணைப்பை மேம்படுத்த ஐந்து வாராந்திர விமானங்களை விமான நிறுவனம் இயக்கும்.
சவூதி அரேபியாவிற்கான இத்தாலிய தூதர் ராபர்டோ கான்டோன், ரோம் மற்றும் ரியாத் இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மையை சுட்டிக்காட்டி பசுமை ஆற்றல், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் 70 க்கும் மேற்பட்ட இத்தாலிய நிறுவனங்களின் வலுவான முதலீட்டைக்
குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் திறன் மற்றும் முயற்சிகளை இத்தாலிய பிரதிநிதிகள் பாராட்டினர், விமானம் மற்றும் விமான வழிசெலுத்தல் சேவைகளில் குறிப்பிடத் தக்க மாற்றங்களுக்கு மேம்பட்ட கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை தூதுக்குழு வலியுறுத்தியது.





