உம்முல்-குரா நாட்காட்டிப்படி, மார்ச் 10, ஹிஜ்ரி 29;ஷாபான் 1445 ஞாயிற்றுக்கிழமை மாலை ரம்ஜான் பிறை காணும் நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்குச் சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.இது புனிதமான ரமலான் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
ரமலான் மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்கும் முயற்சியில், பிறை நிலவைத் தங்கள் கண்களால் அல்லது தொலைநோக்கியைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடியவர்கள், அருகில் உள்ள நீதிமன்றம் அல்லது மையத்தில் தெரிவிக்கலாம்.
பிறை பார்க்கும் நடைமுறையானது இஸ்லாமிய பாரம்பரியத்தின் இன்றியமையாத அம்சமாகும், ரமழான் மாதம் வழிபாட்டிற்கான ஒரு மாதம், விடியற்காலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பு இருந்து தொண்டுகள் செய்ய அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகும்.





