Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ரமலான் மாதத்தில் மக்கா மற்றும் மதீனாவில் பயணிகள் சேவைக்கு தயார் நிலையில் உள்ள பாதுகாப்புப் படையினர்.

ரமலான் மாதத்தில் மக்கா மற்றும் மதீனாவில் பயணிகள் சேவைக்கு தயார் நிலையில் உள்ள பாதுகாப்புப் படையினர்.

176
0

ரமலான் நோன்பு மாதம் தொடங்கியதை அடுத்து , உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து தொடர்புடைய சவூதி பாதுகாப்புப் படைகளும் புனித மாதத்தில் மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு உம்ரா பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் சீரான ஓட்டத்தை உறுதி செய்வதற்காகத் தங்கள் பணியாளர்களையும் வளங்களையும் திரட்டியுள்ளனர்.

மக்காவில் உள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கை மையத்தில் நடைபெற்ற உம்ரா பாதுகாப்புப் படைகளின் தளபதிகளின் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பொதுப் பாதுகாப்பு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அல்-பஸ்ஸாமி, உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சவுத் பின் நயீஃப் உம்ராவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

புனித ரமலான் மாதத்திற்கான பாதுகாப்புத் திட்மானது பாதுகாப்பு அம்சம், கூட்டத்தை நிர்வகித்தல், போக்குவரத்து மேலாண்மை, மனிதாபிமான சேவைகளை வழங்குதல், பங்கேற்கும் சேவை நிறுவனங்களை ஆதரித்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் என ஐந்து முக்கிய அச்சுகளை அடிப்படையாகக் கொண்டது.

மடாஃப் (புனித காபாவைச் சுற்றியுள்ள பகுதி) மற்றும் பெரிய மசூதியின் தரை தளம் ஆகியவை உம்ரா பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டதாகவும், முதல் தளத்தின் ஒரு பகுதியும் கூரையின் ஒரு பகுதியும் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படுவதாகப் பொது பாதுகாப்புத் தலைவர் கூறினார்.

பொதுப் போக்குவரத்து நிலையங்களில் எதிர்பார்க்கப்படும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக வழிபாட்டாளர்களின் ஓட்டத்தை எளிதாக்குவதில் பாதுகாப்புப் படைகளின் பங்கு குறித்தும் லெப்டினன்ட் ஜெனரல் அல்-பஸ்ஸாமி பேசினார்.

மூன்றாவது சவூதி விரிவாக்கம் மற்றும் மத்தாஃப் திட்டத்திற்கு இடையேயான நடைபாதை பயணிகளின் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில் திறக்கப்பட்டது என்றும், தாராவீஹ் மற்றும் தஹஜ்ஜுத் தொழுகைகளின் போது கூட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளின் அமைப்பு இருக்கும் என்று அவர் கூறினார்.

லெப்டினன்ட் ஜெனரல் அல்-பஸ்ஸாமி மத்திய ஹராமில் உள்ள பயணிகள் மற்றும் வழிபாட்டாளர்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பிச்சை எடுப்பது மற்றும் எதிர்மறை நிகழ்வுகளைச் செய்பவர்களைத் தடுக்க களப் பாதுகாப்புக் குழுக்கள் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தும் என்றும் கூறினார்.

குடிமைத் தற்காப்புக் குழுக்கள் உம்ரா பயணிகளின் அனைத்து குடியிருப்புகளிலும், ரஜப் மற்றும் ஷாபான் மாதங்களில் யாத்ரீகர்கள் அடிக்கடி வரும் அனைத்து தளங்கள் மற்றும் வசதிகளிலும் 5,645 சுற்றுப்பயணங்களைச் செயல்படுத்தி, அவர்களின் பாதுகாப்புத் தேவைகளை உறுதி செய்துள்ளன என்று குடிமைத் தற்காப்புப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹமூத் அல்-ஃபராஜ் கூறினார்.

வான் மற்றும் கடல் துறைமுகங்களும் பல மொழிகளைப் பேசக்கூடிய தகுதி வாய்ந்த பணியாளர்களால் ஆதரிக்கப்படுவதாகவும், பயோமெட்ரிக் சாதனங்கள், போலிக் கண்டறிதல் சாதனங்கள் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு ஆவணங்கள் போன்ற சமீபத்திய மேம்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கப்படுவதாகவும் பாஸ்போர்ட்களின் துணை இயக்குநர் மேஜர் ஜெனரல் சலே அல்-முரப்பா சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!