ரியாத்தில் நடந்த சவூதி அரேபிய ஆப்பிரிக்க பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய நிதியமைச்சர் முகமது அல்-ஜதான் முக்கிய துறைகளில் ஆப்பிரிக்காவை வலுவான பங்குதாரராகவும் முதலீட்டு இடமாகவும் சவூதி அரேபியா கருதுகிறது எனக் கூறினார்.ஆப்பிரிக்க நாடுகளில் 2 பில்லியன் ரியால் முதலீடு செய்வதற்கான சவூதி பொது முதலீட்டு நிதியத்தின் திட்டங்களையும் வெளியிட்டார்.
சவூதி அரேபியா பல துறைகளை விரிவுபடுத்த ஆப்பிரிக்காவுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஆப்பிரிக்க கண்டத்தில் 400க்கும் மேற்பட்ட திட்டங்களுக்குச் சவூதி ஆதரவளித்து வருவதாகவும் கூறினார். உணவுப் பாதுகாப்பை அடைவதில், விவசாயம், தொழில்துறை, சுரங்கம் மற்றும் வர்த்தக கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் சவூதி, அரேபிய மற்றும் ஆப்பிரிக்க கூட்டாண்மையின் அடித்தளங்களை ஒருங்கிணைப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
சவூதி அரேபியா, அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் துறைகள், வர்த்தக சங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள், நிதி, வணிக மற்றும் முதலீட்டுத் தலைவர்கள் பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த ஒரு நாள் மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.





