பல்கலைக்கழக விவகாரங்களுக்கான சவூதி கவுன்சில் செவித்திறன் குறைபாடுகள், பார்வைக் குறைபாடுகள், கற்றல் குறைபாடுகள், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுகள், உடல் ஆரோக்கிய குறைபாடுகள், பேச்சுக் குறைபாடுகள் மற்றும் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (ADHD) போன்ற குறைபாடுகள் உள்ள ஊனமுற்றவர்களுக்கு பல்கலைக்கழக சேர்க்கைக்குத் தேவையான திறன் சோதனைத் தேர்வுகளில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
கல்வி அமைச்சரும் பல்கலைக்கழக விவகார கவுன்சிலின் தலைவருமான யூசுப் அல்-பென்யனின் உத்தரவுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கவுன்சிலின் பொதுச் செயலாளர் டாக்டர் பாசம் அல்-பாசம் விளக்கமளித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சோதனையில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆராய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, மேலும் ஆராய்ச்சிபற்றி விவாதிக்க குழு பல அமர்வுகள் மற்றும் பட்டறைகளை நடத்தியது.
சவூதி பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளிகளை அனுமதிப்பதற்கு பொருத்தமான சோதனைகளை வடிவமைக்கக் கல்வி மற்றும் பயிற்சி மதிப்பீட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.





