சவூதி அரேபியா மக்காவில் உள்ள பெரிய மசூதி மற்றும் அதன் முற்றங்களை வழிபாட்டுதாரர்கள் மற்றும் தொழிலாளர்களின் சுமூகமான அணுகலை எளிதாக்கும் வகையில் குறியீட்டு மண்டலங்களாகப் பிரிக்கும் வாய்ப்பை ஆராய்ந்து வருகிறது.
பெரிய மசூதி மற்றும் நபிகள் நாயகம் மசூதியின் விவகாரங்களைப் பராமரிப்பதற்கான பொது ஆணையம் இது தொடர்பாகச் சவுதி தபால் மற்றும் தளவாட சேவை நிறுவனத்துடன் (SPL) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
மசூதி மற்றும் அதன் வளாகத்தில் உள்ள தொழுகையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழிகாட்டும் வகையில், புவியியல் இருப்பிடங்களை துல்லியமாகக் கண்டறியவும், இடஞ்சார்ந்த விளக்கத்தை எளிதாக்கவும் கிராண்ட் மசூதி மற்றும் அதன் முற்றங்களை குறியிடப்பட்ட மண்டலங்களாகப் பிரிப்பது குறித்து SPL ஆய்வு மேற்கொள்ளும்.
கடந்த ஆண்டு வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான உம்ரா பயணிகள் பெரிய பள்ளிவாசல் வந்தடைந்ததாகவும், 2023 இல் 13.5 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு பயணிகள் உம்ரா செய்ததாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Dr. Tawfiq Al-Rabiah கூறினார்.
ஹஜ் மற்றும் உம்ரா பயணிகள் தங்கள் சடங்குகளை எளிதாகவும் வசதியாகவும் செய்ய விரிவான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை உறுதி செய்வதில் சவுதி அரசாங்கம் ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





