போக்குவரத்து பொது ஆணையம் (டிஜிஏ) சிறப்பு போக்குவரத்து செயல்பாடுகள், பேருந்து வாடகை மற்றும் வழிகாட்டுதல், கல்வி போக்குவரத்து மற்றும் சர்வதேச பயணிகள் போக்குவரத்து ஆகியவற்றின் பேருந்து ஓட்டுநர்களுக்கான புதிய சீருடை குறியீட்டை அறிவித்து மேலும் விதிமுறைகள் ஏப்ரல் 27, 2024 முதல் அமலுக்கு வரும் எனத் தெளிவுப்படுத்தியது.
பூட்ஸ் அல்லது ஷூவுடன் அபாயா அணிவது, தலையை மூடுவது அல்லது கருப்பு தொப்பி, நீண்ட கை நீல சட்டை, கருப்பு கால்சட்டை, கருப்பு பெல்ட் மற்றும் கருப்பு பூட்ஸ் ஆகியவை பெண் ஓட்டுநர்களுக்கும், ஆண் ஓட்டுநர்களுக்கான கட்டாய சீருடையில் நீண்ட கை நீல சட்டை, கருப்பு கால்சட்டை, கருப்பு பெல்ட் மற்றும் கருப்பு பூட்ஸ் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட கட்டாய சீருடையில் அடங்கும்.
முன் அனுமதிக்கு உட்பட்டு, நிறுவனங்கள் தங்கள் சொந்த சீருடைகளை உருவாக்க ஆணையம் அனுமதிக்கிறது. இதில் நீளமான அல்லது குட்டைக் கைச்சட்டை, நீண்ட பேன்ட், பெல்ட், பூட்ஸ் மற்றும் சட்டையின் நிறத்துடன் பொருந்தக்கூடிய தொப்பி ஆகியவை அடங்கும்.
ஓட்டுநர்கள் தங்கள் சீருடையில் ஒரு ஜாக்கெட் அல்லது கோட் சேர்க்கலாம். ஓட்டுநரின் அடையாள அட்டைகள் ஓட்டுநரின் பெயர், புகைப்படம், எண், நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோ ஆகியவற்றைக் காட்ட வேண்டும். சீருடை ஓட்டுநரின் அடையாள அட்டையில் உள்ள அத்தியாவசியத் தகவல்களை மறைக்கக் கூடாது.