கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), சவூதி பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து, 39 மற்றும் 40வது நிவாரண விமானங்களை எகிப்தின் எல்-அரிஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது.
இந்த விமானங்கள் இரண்டு டிரக்குகள் மற்றும் இரண்டு ஃபோர்க்லிஃப்ட்கள் உட்பட அத்தியாவசிய தளவாட உபகரணங்களை எகிப்திய செஞ்சிலுவைக்கு கொண்டு சென்றன.
காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனிய மக்களுக்காக எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு வரும் நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு இந்த விமானம் அனுப்பி வைக்கப்படுள்ளது.
நெருக்கடிகள் மற்றும் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு உதவுவதில் அதன் பங்கைப் பிரதிபலிக்கும் வகையில், உலகெங்கிலும் தேவைப்படும் நாடுகள் மற்றும் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான சவூதி அரேபியாவின் வரலாற்று உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.





