பாலஸ்தீன அதிகாரசபைக்கு முழு ஐ.நா உறுப்புரிமை வழங்கும் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்படாத ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் முடிவு குறித்து சவூதி வெளியுறவு அமைச்சகம் ஏமாற்றம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தின் முழு உறுப்புரிமை தடைபடுவது அமைதி முயற்சிகளுக்கு இடையூறு அளிக்கும் என்றும் சர்வதேச சட்டத்தை மீறத் தொடர்ந்து இடமளிக்கும் என அமைச்சகம் வலியுறுத்தியது.
காசா பகுதியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமை மற்றும் மாநில உரிமையை ஆதரிக்கச் சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சவூதி அரேபியா வலியுறுத்தியது.





