200 மில்லியன் டாலர் பணமோசடி வழக்கில் மூன்று சவூதி குடிமக்கள் மற்றும் ஒரு வெளிநாட்டவர் வணிக மூடிமறைப்பின் கீழ் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதுச் செய்யப்பட்டவர்கள் சவூதி அரேபிய நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டனர், பொருளாதார குற்றப்பிரிவு பொது வழக்கின் கீழ் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை முடித்தது.
ஒரு பெண் குடிமகன் கடன் வசூல் தொழிலை ஆரம்பித்து அதைத் தனது கணவரிடம் ஒப்படைத்துள்ளார், அதையொட்டி வெளிநாட்டவருக்கு நிறுவனத்தையும் அதன் வங்கிக் கணக்குகளையும் நிர்வகிக்க உதவியது, அதே நேரத்தில் மற்றொரு குடிமகனும் அதே குற்றவியல் முறையை மேற்கொண்டது விசாரனையில் தெரியவந்தது.
நிதியைச் சரிபார்த்ததில், நூற்றுக்கணக்கான நிதி பரிமாற்ற வவுச்சர்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பரிமாற்றத்திற்கான நியாயம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றிலிருந்து பொருட்களை வாங்குவதாக இருந்தபோதிலும், ரசீது மற்றும் விநியோக ஆவணங்கள் பொய்யானவை என்று கண்டறியப்பட்டது.
தேசிய பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய செயல் தடை செய்யப்பட வேண்டும் என்றும், மீறுபவர்கள் கடுமையான குற்றவியல் பொறுப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.





