மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் மற்றும் மனித வள மேம்பாட்டு நிதியத்தின் (HADAF) இயக்குநர்கள் குழுவின் தலைவர் இன்ஜி. அஹ்மத் அல்-ராஜி மற்றும் கல்வி அமைச்சர் யூசுப் அல்-பென்யான் ஆகியோர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவின் போது சவூதி பள்ளிக்கூடங்களில் தொழில்சார் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை முயற்சியைத் தொடங்கி வைத்தனர்.
HADAF இன் டைரக்டர் ஜெனரல் துர்கி அல்ஜாவினி, தொழிற்கல்வி வழிகாட்டுதல் என்ற கருத்தை வலுப்படுத்தவும், அதை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் செயல்படுத்தி தகுதிவாய்ந்த தொழிற்கல்வி ஆலோசகர்களின் குழு மூலம், தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்பக் கல்வி முடிவுகளைச் சீரமைக்க விரும்புவதாகவும், அதே போல் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் தற்போதைய மற்றும் எதிர்கால திறன்கள் மற்றும் தொழிலாளர் சந்தைக்கான தேவைகள் பற்றி அறிந்து கொள்ள உதவுவதாகவும் கூறினார்.
இந்த முயற்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவூதி முழுவதும் உள்ள 67 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து ‘பல்கலைக்கழகங்களில் தொழில் வழிகாட்டுதல்’ முன்முயற்சியை அறிமுகப்படுத்திய பின்னர் அறிவிக்கப்பட்டது என்று கூறினார்.
பல்கலைக்கழக மட்டத்தில் 72,000க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்குத் தொழில்சார் வழிகாட்டல் சேவைகள் வழங்கப்பட்டதாக அல்ஜாவினி கூறினார்.
நடப்பு ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, SUBUL தளத்தினை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை சுமார் 600,000 பார்வையாளர்களையும், தொலைதூர தொழில்முறை வழிகாட்டுதல் அமர்வுகளின் பயனாளிகளின் எண்ணிக்கை சுமார் 17,000 ஆண் மற்றும் பெண் பயனாளிகளும், 103 ஆண் மற்றும் பெண் தொழில்முறை வழிகாட்டிகளும் தகுதி பெற்றனர்.
அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட தொழிற்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைத் திட்டம், மாணவர்களின் தொழில்சார் ஆய்வுகள், தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைத் திட்டங்கள் அறிவு மற்றும் திறன்களைப் பெறுவதற்கும், விருப்பங்களை அடையாளம் காணவும், மாற்று வழிகளை ஆராயவும், சமூகத்தில் வெற்றி பெறவும் தேவையான அனுபவங்களைப் பெற உதவுகின்றன.





