சவூதி அரேபியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே தொழில் மற்றும் சுரங்கத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆப்பிரிக்க நாடுகளின் அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார் தொழில் மற்றும் கனிம வள அமைச்சர் பந்தர் அல் கொராயேஃப்.
சவூதி மற்றும் ஆப்பிரிக்க நிறுவனங்களுக்கிடையில் கூட்டாண்மைகளை நடத்தி தொழில்நுட்ப நிபுணத்துவம் பரிமாற்றம் மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நம்பிக்கைக்குரிய முதலீட்டு வாய்ப்புகளில் இருந்து பயனடைவதற்கான வழிகள் பற்றிச் சந்திப்பில் இருதரப்பினரும் விவாதித்தனர்.
சவூதி அரேபியாவின் தொழில்துறை மற்றும் கனிம வள அமைச்சகம் ரியாத்தில் நடைபெற்ற சவுதி-ஆப்பிரிக்க பொருளாதார மாநாட்டின் போது சுரங்கத் துறையில் ஒத்துழைக்க 4 ஆப்பிரிக்க நாடுகளுடன் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கையொப்பமிட்ட ஒப்பந்தங்களில், CHADன் சுரங்கங்கள் மற்றும் புவியியல் அமைச்சகம், செனகலின் சுரங்கங்கள் மற்றும் புவியியல் அமைச்சகம் , ஜிம்பாப்வேயின் சுரங்கங்கள் மற்றும் சுரங்க மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றுடன் சுரங்க மற்றும் கனிம வளங்கள் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடங்கும்.
கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் பற்றிய தகவல்களின் ஆதாரங்களை உருவாக்குதல், அனுபவங்கள் மற்றும் நிபுணர்களைப் பரிமாறிக்கொள்வது, சுரங்கத் துறைக்கான விதிமுறைகள், சட்டம் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றில் கூட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் சுரங்கத் துறையில் ஒத்துழைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





