Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் துபாய் ஏர்ஷோவில் இரண்டாவது இரட்டை லிவரி டிசைனை வெளியிட்டது ரியாத் ஏர் நிறுவனம்.

துபாய் ஏர்ஷோவில் இரண்டாவது இரட்டை லிவரி டிசைனை வெளியிட்டது ரியாத் ஏர் நிறுவனம்.

353
0

2025 இல் தொடங்கப்பட உள்ள பொது முதலீட்டு நிதியத்திற்கு (PIF) முழுமையாகச் சொந்தமான சவுதி அரேபிய விமான நிறுவனமான ரியாத் ஏர் துபாய் ஏர்ஷோ 2023 இல் அதன் இரண்டாவது நிரந்தர இரட்டை-லிவரி வடிவமைப்பை வெளிப்படுத்தியது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், ரியாத் ஏர் தனது முதல் லிவரியை பாரிஸ் ஏர்ஷோவில் வெளியிட்டு, அதன் IATA ஏர்லைன் டிசைனேட்டர் குறியீட்டை (RX) பாதுகாத்து கப்பற்படைக்கு வளம் அளிக்க 90 GEnx என்ஜின்களுக்கான ஒப்பந்தத்தை முடிவு செய்தது. மேலும் விமான நிறுவனம் இதற்கு முன்பு மார்ச் மாதம் 72 போயிங் 787-9 ட்ரீம்லைனர்களுக்கு ஆர்டர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது லிவரி ரியாத் ஏர் விமானத்தை லாவெண்டர் மற்றும் இண்டிகோ பெயிண்ட் நிறத்தில் பின்புறம் இறகு போன்ற வடிவமைப்பையும், வால், என்ஜின்கள் மற்றும் அடிபகுதியில் விமானத்தின் வர்த்தக முத்திரை லோகோவுடன், ஆங்கிலம் மற்றும் அரேபிய மொழிகளில் எழுதப்பட்ட “ரியாத் ஏர்”வாக்கியம் விமானத்தில் முக்கியமாக இடம்பெற்று, தரையிலும் வானத்திலும் எளிதாக அடையாளம் காணக்கூடிய வகையில் உள்ளது.

ரியாத் ஏர் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமானங்களை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும், வணிக ரீதியான விமானப் போக்குவரத்தில் மிகப் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமாக, ரியாத் ஏர் நிறுவனத்தின் இரண்டாவது லிவரியை அறிமுகம் செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக ரியாத் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி டக்ளஸ் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!