கடந்த (10-4-23) ஜித்தாவில் மிகச் சிறப்பாக அஜிஸியா இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நடத்திய ஈகை பெருநாள் தொழுகையில் 650க்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
இதில் உஸ்தாத். முஹம்மது ரியாசுதீன் அஜிஸி அவர்கள் இரமலானில் செய்த இபாதத்துகள் போன்று இரமலானுக்கு பிறகும் முஸ்லிம்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தித் தமிழில் குத்பா உரையாற்றினார்.
நகரத்தை விட்டு 30 நிமிடம் தூரம் இருந்தும் தொழுகை ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே பெரும் திரளில் மக்கள் கூடி தக்பீர் சொல்லியதும் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்கள் கூறி இனிப்புகள் பரிமாறிக் கொண்டதும் தாயக பெருநாளை நினைவுபடுத்தியது.





