Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சோமாலியா மற்றும் சூடானின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அர்ப்பணிப்பை வலியுறுத்திய சவூதி அமைச்சர்.

சோமாலியா மற்றும் சூடானின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அர்ப்பணிப்பை வலியுறுத்திய சவூதி அமைச்சர்.

143
0

சோமாலியா மற்றும் சூடான் குடியரசுகளின் ஒற்றுமை மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சவூதி அரேபியாவின் உறுதிப்பாட்டை துணை வெளியுறவு அமைச்சர் வாலிட் அல்-குரைஜி உறுதிப்படுத்தினார். வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் சார்பாக உகாண்டாவில் நடைபெற்ற வளர்ச்சிக்கான அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் (IGAD) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அல் குரைஜி இதனைத் தெரிவித்தார்.

துணை வெளியுறவு அமைச்சர் தனது உரையில், சவூதி-ஆப்பிரிக்க உறவுகளை ஆதரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் சவூதியின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார், இது ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் IGAD உறுப்பு நாடுகளுடன் அதன் உறவை உறுதிப்படுத்துகிறது.

சூடான் நெருக்கடியில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடு சூடானின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதிலும், அரசாங்க நிறுவனங்களைப் பாதுகாப்பதிலும், சூடான் மக்களின் வளங்களைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவதாக அல்-குரைஜி கூறினார். சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு ஏற்பப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பான ஜித்தா பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது சூடானின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான பாதையாகும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!