சவூதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள வழக்கறிஞர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டை விட நடப்பு ஆண்டில் 315 சதவீதம் அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் பெண் வழக்கறிஞர்களுக்கான 3,416 உரிமங்கள் உட்பட ஆண் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்ட சட்ட உரிமங்களின் எண்ணிக்கை 15,936 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டத் துறை பல முன்னேற்றங்களைக் கண்டு Najiz.sa தளத்திற்குள் வழக்கறிஞர்களின் போர்டல் மூலம் பல மின்னணு சேவைகளை வழக்கறிஞர்களுக்குக் கிடைக்கச் செய்வதோடு துறையின் மேன்மையை வலுபடுத்தியுள்ளது.
நீதித்துறை வழக்கறிஞர்களுக்கான தகுதி மற்றும் பயிற்சி திட்டங்களை நிறுவி, வழக்கறிஞர் தகுதித் திட்டத்தின் காலம் முதுகலை பட்டப்படிப்புக்கு ஒரு வருடம் முதல் இளங்கலை பட்டப்படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்வரை நிர்ணயித்துள்ளது.