Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி ரியால் 19.2 பில்லியனாக உயர்ந்துள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவு.

சவூதி ரியால் 19.2 பில்லியனாக உயர்ந்துள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவு.

343
0

சவூதி அரபியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு சவூதி ரியால் 19.2 பில்லியனாக உயர்ந்து 2021 ஆண்டுடன் ஒப்பிடும்போது 32.7% கணிசமான அதிகரிப்பைக் காட்டுவதாக, புள்ளி விவரங்களுக்கான பொது ஆணையத்தின் (GASTAT) புதிய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத் துறை நிதியுதவி சவூதி ரியால் 11.1 பில்லியன், அதாவது மொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியில் 58%, தனியார் துறை நிதியுதவி சவூதி ரியால் 7.5 பில்லியன் அதாவது மொத்த நிதியில் 39%, மற்றும் கல்வித்துறை சவூதி ரியால் 558 மில்லியன் அதாவது மொத்த நிதியில் 3% பெற்றது எனத் துறைகளுக்கிடையேயான நிதியின் பங்கீடு குறித்தும் அறிக்கை விவரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் நாட்டில் மொத்த ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை 21.6% அதிகரித்து 30,160 பேரை எட்டியுள்ளதாகவும், இதில் கல்வித்துறையில் 89% அதிகரித்து 26,750 ஆராய்ச்சியாளர்களும், தனியார் துறை 6% அதிகரித்து 1,810 ஆராய்ச்சியாளர்களும், அரசுத்துறையில் 5% அதிகரித்து 1,590 ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர் என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!