Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி மனித உரிமைகள் பாதுகாப்பில் உலக தரத்தை அடைய முயல்வதாக சவுதி மனித உரிமைகள்...

சவூதி மனித உரிமைகள் பாதுகாப்பில் உலக தரத்தை அடைய முயல்வதாக சவுதி மனித உரிமைகள் ஆணையத்தின் (HRC) தலைவர் கூறியுள்ளார்.

167
0

மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதில், உலகளாவிய தரத்தை அடைவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால மீளாய்வில் (UPR) உரையாற்றிய, சவூதி மனித உரிமைகள் ஆணையத்தின் (HRC) தலைவர் Dr. Hala Al-Tuwaijri அடிக்கோடிட்டுக் காட்டினார்.

சவூதி அரேபியா முந்தைய மூன்று மறுஆய்வு சுழற்சிகளின் போது வழங்கிய 450 பரிந்துரைகளில் பெரும்பாலான பரிந்துரைகளை ஆதரித்து 85 சதவீதத்தை நடைமுறைப்படுத்தியதாகவும், மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகச் சட்டமன்ற, நீதித்துறை, நிர்வாக மற்றும் நடைமுறை நிலைகளில் சீர்திருத்தங்கள் விரிவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பயனுள்ள சட்ட கட்டமைப்பை நிறுவுவதையும், பெண் உரிமைகள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை அமல்படுத்தவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை அல்-துவைஜ்ரி வலியுறுத்தினார்.

குழந்தைகளின் உரிமைகளை ஊக்குவிப்பதற்காக, ஆறு முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கட்டாய கல்வி என மனிதவள மேம்பாட்டுத் திட்டம் ஒரு விரிவான கல்விப் பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!