சவூதி அரேபியாவில் சமீபத்திய ஹெல்த்கேர் புள்ளிவிவரங்கள் 2023 அறிக்கை, 37.5% பெரியவர்கள் தனியார் மருத்துவக் காப்பீட்டை வைத்திருக்கிறார்கள், 21.8% பேர் நேரடியாகச் சுகாதார சேவைகளுக்குப் பணம் செலுத்துகிறார்கள் எனத் தெரிவித்துள்ளது.
புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) குழந்தைகளின் சுகாதார பாதுகாப்பு மற்றும் வயது வந்தோருக்கான மருத்துவ பரிசோதனைகள் பற்றிய நுண்ணறிவு உள்ளிட்ட விரிவான அறிக்கைகளை வெளியிட்டு, குறிப்பிடத் தக்க வகையில், 46.8% பெரியவர்கள் வருடாந்திர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள மக்கள்தொகையின் சுகாதார நிலை 2023 அறிக்கை, 53% பெரியவர்களும் 70.9% குழந்தைகளும் மிக நல்ல ஆரோக்கிய உணர்வுகளைக் கொண்டுள்ளதாகவும குறிப்பிடுகிறது.
பெண்களின் உடல்நலம் மற்றும் பராமரிப்பு புள்ளிவிவரங்கள் 2023 அறிக்கை,88.8% பெண்கள் பிரசவத்திற்கு முன் குறைந்தது நான்கு முறையாவது சுகாதார வழங்குநர்களைச் சந்திக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல்நலச் செலவுகளை ஈடுசெய்வதில் தனியார் காப்பீடு 26.3% பங்களிக்கிறது என்றும் அறிக்கை கூறுகிறது.





