இதுவரை 350 சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் உள்ளூர் தலைமையகத்தைச் சவுதி அரேபியாவில் நிறுவ உரிமம் பெற்று, அவர்களில் பெரும்பாலோர் ரியாத்தில் நிறுவனம் உள்ளதாக முதலீட்டு அமைச்சர் காலித் அல்-பாலிஹ் அறிவித்தார்.
சவூதி அரேபியாவில் சர்வதேச முதலீடுகளுக்கான உரிமங்களின் எண்ணிக்கை பார்வையின் தொடக்கத்தில் 3,000 லிருந்து 30,000 வணிக உரிமங்களாக அதிகரித்துள்ளதாகவும், முதலீட்டாளர்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும், புதுமை மற்றும் தொழில்முனைவுகளை மேம்படுத்துவதற்கான சவூதியின் உறுதிப்பாட்டை இது வலியுறுத்துகிறது என அல்-ஃபாலிஹ் கூறினார்.
நிகழ்காலத்திற்கு ஏற்றத் திறன்களைக் கொண்டு எதிர்காலத் திறன்களைப் பின்பற்றுவதற்குத் தயாராக இருக்கும் பணியாளர்கள் தேவையென முதலீட்டாளர்கள் கூறுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத்தில் தனியார் துறையின் பங்களிப்பு 40 சதவீதத்திலிருந்து 65 சதவீதம் அதிகரிகத்து தனியார் துறையின் அளவு அதன் தற்போதைய அளவை விட நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் அல்-ஃபாலிஹ் கூறினார்.
சவூதி அரேபியா பொருளாதாரத்தில் $3 டிரில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, நிதி மற்றும் தொழில்முறை சேவைகள், சுகாதாரம் மற்றும் விவசாயம், போன்ற புதிய பொருளாதாரத் துறைகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் அல்-ஃபாலிஹ் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் மாற்றம், ஆட்டோமேஷன், விநியோகச் சங்கிலிகளின் மாற்றம், புதிய தொழில்நுட்பம் மற்றும் பிற காரணிகளால் நிர்வகிக்கப்படும் தீவிரமான கட்டமைப்பு மாற்றங்கள் மூலம் உலகம் சென்று கொண்டிருக்கிறது என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





