சவூதி அரேபியாவிற்கு வரும் பயணிகளின் செலவு 2022 முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 2023 முதல் காலாண்டில் 224.6 சதவீதம் அதிகரித்து 9.8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாகச் சவுதி சென்ட்ரல் வங்கி (SAMA) வெளியிட்ட பேலன்ஸ் பேமெண்ட் தரவுகளில் குறிப்பிட்டுள்ளது.
தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சவூதிக்கு வெளியே பயணம் செய்தவர்களின் செலவு சுமார் $3.7 பில்லியன் ஆகும், இது 2022 முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது 7.9 சதவீதம் அதிகமாகும்.
மேலும் 2021 ஆம் ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் வெளிநாடுகளுக்குச் சென்ற சவுதிகளின் செலவு 310 சதவீதம் அதிகரித்து 7.16 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த மே மாதத்தில் மத்திய வங்கியின் சொத்துக்கள் SR1.872 டிரில்லியனாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதத்தைவிட SR49.5 பில்லியன் மாதாந்திர அதிகரிப்பு எனவும், மேலும் 2022 ஆம் ஆண்டின் அதே மாதத்தில் SR1.864 டிரில்லியன்களுடன் ஒப்பிடுகையில், அதன் சொத்துக்கள் கடந்த மே மாதத்தில் SR7.5 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் SAMA தரவு காட்டுகிறது.