சவூதி அரேபியா மற்றும் கோஸ்டாரிகா இடையே முதல் கட்ட அரசியல் ஆலோசனைக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கோஸ்டாரிகாவின் தலைநகர் சான் ஜோஸில் சவூதி அரேபியாவின் துணை வெளியுறவு அமைச்சர் வலீத் அல்-குராஜி மற்றும் கோஸ்டாரிகா வெளியுறவு அமைச்சர் அலெஜான்ட்ரோ சோலானோ ஓர்டிஸ் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது முதல் சுற்று அரசியல் ஆலோசனை நடைபெற்றது.
சவூதி அரேபியாவிற்கும் கோஸ்டாரிகாவிற்கும் இடையிலான அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். பல்வேறு சர்வதேச விவகாரங்கள் மற்றும் அவை தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பெருவுக்கான சவூதி அரேபியாவின் தூதர் டாக்டர் ஹசன் அல்-அன்சாரி அவர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.





