சவூதி அரேபியாவின் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம், சவூதியில் காய்கறி கழிவுகளின் குறிப்பிடத் தக்க சவாலை எதிர்கொள்ள விழிப்புணர்வு மற்றும் பொறுப்பான நுகர்வு ஆகியவற்றை பரிந்துரைக்கிறது.
விவசாயத் துறையின் முக்கியக் கவலையாக இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்த அமைச்சகம், சவூதி அரேபியா ஆண்டுதோறும் 234,000 டன் தக்காளி, 201,000 டன் உருளைக்கிழங்கு மற்றும் குறிப்பிடத் தக்க அளவு வெங்காயம், வெள்ளரிகள், சீமை சுரைக்காய் உட்பட மொத்தம் 335,000 டன்கள் கூடுதல் காய்கறி கழிவுகள் கணிசமான இழப்பைச் சந்திக்கிறது என்று தெரிவித்துள்ளது.
உணவு வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அமைச்சகம், பொறுப்பான நுகர்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், விவசாய நிலைத்தன்மையை அடைவதற்கு அவசியமான கழிவுகளைக் குறைக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
பகுத்தறிவு நுகர்வு நடத்தைகளை நோக்கிய கூட்டுப் பொறுப்பை வலியுறுத்தி, தேசியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நிலையான எதிர்காலத்தை வளர்ப்பதற்கும் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த முன்முயற்சிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.





