சவூதி அரேபியா பிப்ரவரி மாத தொடக்கத்தில் குறைந்தபட்சம் சவூதி ரியால் 40 பில்லியன் ($10 பில்லியன்) திரட்டச் சவூதி அராம்கோவில் தொடர்ந்து பங்கு வழங்குவதற்கான திட்டங்களைப் புதுப்பிக்கப் பரிசீலித்து வருகிறது என்று புளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
சவூதி அரசாங்கம் தனது எண்ணெய் விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துமாறு அரம்கோவிற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சவூதி ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து செயல்பட்டு சவுதி பங்குச் சந்தையில் பங்குகளை விற்பதன் மூலம் குறைந்தபட்சம் 40 பில்லியன் ($10 பில்லியன்) திரட்ட முயல்வதாகவும் தெரிவித்தனர்.
உலகின் மிகப்பெரிய பங்கு விற்பனையான அரம்கோவின் ஆரம்ப பொது வழங்கலில் (IPO) சவுதி அரேபியா சுமார் 30 பில்லியன் டாலர்களை திரட்டிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய விற்பனைத் திட்டங்கள் வந்துள்ளன.
அரம்கோவில் சவூதி அரசாங்கம் நேரடியாக 90.19 சதவீத பங்குகளும் பொது முதலீட்டு நிதியம் (PIF) மற்றும் PIF துணை நிறுவனமான சனாபில் தலா நான்கு சதவீதத்தையும் வைத்திருக்கிறது.
எரிசக்தி அமைச்சகம் அரம்கோவிற்கு அதன் எண்ணெய் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு 13 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்துவதை நிறுத்துமாறு உத்தரவிட்டு, அதற்குப் பதிலாக அதிகபட்ச அளவு 12 மில்லியனாக இருக்கலாம், இது நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி அளவை ஒப்பிடும்போது ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் இருப்பு வைத்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





