2024 ஆம் ஆண்டு கோடையில் நடைபெறும் வருடாந்திர எஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையின் கிக் ஆஃப் மெகா நிகழ்வு குறித்து ரியாத்தில் நடந்த “தி நியூ குளோபல் ஸ்போர்ட் மாநாட்டில்”சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்தார்.
கேமிங் மற்றும் விளையாட்டுக்கான உலகளாவிய மையமாகச் சவூதி அரேபியாவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் போட்டி, அதன் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்தவும், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறைகளை மேம்படுத்தவும் நாட்டின் குறிப்பிடத் தக்க முயற்சிகளைக் குறிக்கிறது.
இளவரசர் எஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை அறக்கட்டளையைத் தொடங்கினார். எஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை விளையாட்டுத் துறையை வளர்ப்பதற்கான சவூதியின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.
மேலும், Esports World Cup ஆனது ஒட்டுமொத்த விளையாட்டுத் துறைக்கும் ஒரு செழிப்பான சூழலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 பில்லியன் ரியால்களுக்கு மேல் பங்களிப்பதையும் 2030க்குள் 39,000 புதிய வேலைகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பல துறைகளில் கோடை சரிவைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேமிங் உலகம் இந்த முக்கிய முயற்சியின் மாற்றத் தக்க தாக்கத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறது.





