சவூதி ஷோரா சபை சபாநாயகரின் உதவியாளர் ஹனன் பின்ட் அப்துல் ரஹிம் அல்-அஹ்மதி அவர்களின் தலைமையிலான ஷோரா கவுன்சிலின் தூதுக்குழு, ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு வந்த ஸ்வீடன் பிரதிநிதிகள் குழுவின் இன்டர்-பார்லிமென்டரி யூனியன் தலைவரான ஆரின் கராபேட் அவர்களை சந்தித்து இருதரப்பு நாடாளுமன்ற உறவுகள் மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து விவாதித்து அதன் மூலம் நாடாளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டதாக சவூதி செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது.
சவூதி விஷன் 2030ன் இலக்குகளின் கட்டமைப்பிற்குள், பெண்களுக்கு தலைமைப் பதவிகளை வழங்குவதன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசின் முயற்சிகளையும் அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
மேலும் துணைத் தலைவர் எலிசபெத் தாண்ட் ரிங்க்விஸ்ட் தலைமையிலான பாராளுமன்றத்தின் வர்த்தக மற்றும் தொழில் குழுவுடன் ஷோரா தூதுக்குழு ஒரு சந்திப்பையும் நடத்தி சவூதி அரேபியாவிற்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் அம்சங்கள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.