உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையின்படி 2023ல் சவூதி அரேபியா போக்குவரத்து விபத்து இறப்புகளின் எண்ணிக்கையில் 50 சதவீதமும், காயம் விகிதங்கள் 35 ஆகவும் வீழ்ச்சி அடைந்து, போக்குவரத்து பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தியுள்ளதாகச் சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சரும் போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவருமான ஃபஹத் அல்-ஜலாஜெல் கூறியுள்ளார்.
மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, போக்குவரத்து பாதுகாப்பு தரநிலைகள், தொழில்நுட்பம், சட்டம், விழிப்புணர்வு மற்றும் சுகாதார கூறுகள் காரணமாக இந்த இலக்கு அடையப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலை விபத்து மரணங்கள் 35% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் போக்குவரத்து விபத்துக்கள் காரணமாகத் தேசிய உற்பத்தி இழப்பு விகிதங்கள் 4.7 சதவீதத்தை எட்டியது, மதிப்பிடப்பட்ட ஆண்டு பொருளாதாரச் செலவு 21 பில்லியன் ரியால்கள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் 1.7% ஆக இருந்தது. சவுதி அரேபியாவில் சாலைகளுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளுக்கும் தொழில்நுட்பக் குறிப்பு, திறமையான திட்டமிடல், வடிவமைப்பு, செயல்படுத்தல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை செயல்படுத்தும் வகையில் ஆகியவற்றை உள்ளடக்கிய 25 குறியீடுகளைச் சாலைகளுக்கான பொது ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.





