சட்டத்தை மீறியதற்காகச் சவூதி அரேபியாவின் தொழிற் போட்டிக்கான பொது ஆணையம் (ஜிஏசி) கார் முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் 43 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் துறையில் 70 நிறுவனங்களுக்கு எதிரான 128 விசாரணைகளின் முடிவுகளை ஆய்வு செய்த பின்னர், 43 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆறு நிறுவனங்களுக்கு எதிராகவும், சுகாதார அமைச்சகம் திட்டங்களுக்கு ஏலம் சமர்ப்பித்த ஐந்து நிறுவனங்களில் 2 நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடர GAC முடிவு செய்தது.
மூன்று பெரிய மருந்தகங்கள் மற்றும் நான்கு குழந்தைகள் நலப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விலை ஒருங்கிணைப்பு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் முடிவுகளை ஆணையம் மதிப்பாய்வு செய்து, சந்தேகத்தின் பேரில் அந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.
தொழில்முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், தகவல் மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளில் சட்டத்தை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவனங்களை விசாரிக்கவும், அதிகாரத்தின் இயக்குநர்கள் குழு ஆதாரங்களைச் சேகரிக்க நடவடிக்கை எடுக்க ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





