சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகள் கோடைக்காலத்தில் காணக்கூடிய கடுமையான வெப்பத்தின் வெளிப்பாட்டிற்கு எதிராகச் சுகாதார அமைச்சகம் (MoH) மக்களை எச்சரித்து, அதிக வெப்பமானது மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்றும் இதில் தோல் வறட்சி, வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப சோர்வு ஆகியவை மிக முக்கியமான ஆபத்து என்று MoH விளக்கியது.
பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரங்களில் நிழலில் தங்குவது, தலையை மறைப்பது, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது, சன்கிளாஸ் அணிவது, போதுமான நீர் மற்றும் திரவங்கள் வெப்ப அலைகளைத் தவிர்ப்பதற்கான மிக முக்கியமான வழிகள் என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் அதிக வெப்பத்தின் தாக்கம் இந்த வார இறுதி வரை தொடரும் என்றும், கிழக்குப் பகுதியில் (அல்-ஷர்கியா) 48-50 டிகிரி செல்சியஸ் வரையிலும், அல்-காசிமின் கிழக்குப் பகுதிகள், ரியாத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் அத்துடன் மதீனாவின் மேற்குப் பகுதிகளில் 46-48 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிக வெப்பநிலை இருக்கும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.