கிங் அப்துல்அஜிஸ் பல்கலைக்கழகம் கடல்சார் துறை சிறப்புப் படிப்புகளில் முதல் முறையாகப் பெண் சேர்க்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடல்சார் ஆய்வுகள் கல்லூரியில் மகளிர் மாணவர் விவகாரங்களுக்கான புதிய நிறுவனம் ஒன்றை நிறுவுவதை உள்ளடக்கிய முன்முயற்சி, சவுதி பெண்களைப் புதிய தொழில்களுக்குத் தகுதிப்படுத்துவதையும் மற்றும் இத்துறையில் ஆராய்ச்சி மற்றும் படிப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கடல்சார் ஆய்வுகள் கல்லூரியின் டீன் டாக்டர். பைசல் அல்-தைபானி விளக்கினார்.
கடல்சார் கணக்கெடுப்பு மற்றும் போக்குவரத்தில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் பயிற்சியை வழங்குவதன் மூலம் சவூதியின் மனித வளங்களைத் தயாரிப்பதற்கும் தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் பங்களிப்பதே கல்லூரியின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
கடல்சார் தொழிலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதில் சவுதியின் உறுதிப்பாட்டை டாக்டர் அல்-தைபானி எடுத்துரைத்தார் மற்றும் சவுதி அரேபியாவிற்குள் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத் தக்க அளவில் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டார்.





