சவூதி மேற்பார்வை மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (Nazaha) லஞ்சம், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தல் மற்றும் பணமோசடி செய்தல் ஆகிய ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், தேசிய பாதுகாப்பு அமைச்சகம், நீதி அமைச்சகம், கல்வி அமைச்சகம், சுகாதார அமைச்சகம், நகராட்சி, ஊரக விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகம், ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் ஆகியவற்றை சேர்ந்த 146 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் Nazaha அதிகாரிகள் மேற்கொண்ட 1657 ஆய்வு சுற்றுகளின விளைவாக 239 அதிகாரிகள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 146 பேர் கைது செய்யப்பட்டதோடு சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளுக்கு எதிராகப் பல கிரிமினல் மற்றும் நிர்வாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்று அதிகார சபை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்குகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் தகவல்களை, இணையதள முகவரியான (https://nazaha.gov.sa/Services/ApplyReports) மற்றும் அதன் கட்டணமில்லா தொலைபேசி (980), தனிப்பட்ட ஒப்பந்தம், வழக்கமான அஞ்சல், தொலைபேசி தந்தி மற்றும் தொலைநகல் (0114420057) மூலம் பெறுவதாக Nazaha குறிப்பிட்டது.





