Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் உலகளாவிய ஹலால் சந்தை 2025 ஆம் ஆண்டளவில் 7.7 டிரில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்ப்பு.

உலகளாவிய ஹலால் சந்தை 2025 ஆம் ஆண்டளவில் 7.7 டிரில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்ப்பு.

172
0

வர்த்தக அமைச்சர் டாக்டர் மஜீத் அல்-கசாபியின் தலைமையில் மக்கா கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் மையத்தில் “ஹலால் துறையில் படைப்பாற்றல்” என்ற முழக்கத்துடன் Manafea மற்றும் ஹலால் சேவைகளுக்கான இஸ்லாமிய சேம்பர் (ICHS), மன்றத்தை ஏற்பாடு செய்து அதில் ஹலால் தொழில் துறையில் பல முக்கிய முதலீட்டு கூட்டாண்மை மற்றும் நம்பிக்கைக்குரிய பொருளாதார வாய்ப்புகள் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10 க்கும் மேற்பட்ட கலந்துரையாடல் அமர்வுகள் மற்றும் 250 கூட்டங்கள் மூலம், மன்றம் உலகில் உள்ள ஹலால் தொழில் துறை தொடர்பான எண்ணற்ற பிரச்சினைகள் மற்றும் தலைப்புகளை விவாதிக்கிறது.

ஹலால் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், விநியோகச் சங்கிலி மேலாண்மை, தரக் கட்டுப்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நுகர்வோர் விருப்பங்களைச் சந்திப்பது உட்பட இந்தத் துறையில் உள்ள போக்குகள், புதுமைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஆராய்தல் ஆகியவையும் அடங்கும்.

முஸ்லீம் மற்றும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் இருந்து ஹலால் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால்,2024 ஆம் ஆண்டில் ஹலால் பொருட்களுக்கான நுகர்வோர் செலவினம் 2.4 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய ஹலால் சந்தை குறிப்பிடத் தக்க வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில் இந்தச் சந்தையின் வளர்ச்சியின் அளவு 2025 ஆம் ஆண்டில் 7.7 டிரில்லியன் டாலர் எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நிதித் துறையானது உணவு மற்றும் பானங்கள் துறை, மருந்து, மருத்துவம், சுகாதாரம் மற்றும் அழகுசாதனத் தயாரிப்புகளைத் தொடர்ந்து பயணம் மற்றும் சுற்றுலா, மற்றும் பிற ஹலால் தொழில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!