பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் வழிகாட்டுதலின் கீழ் உலக பொருளாதார சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் நோக்கில், நாட்டில் ஒரு அறிவு மையத்தை நிறுவும் திட்டத்தை உலக வங்கி குழுவுடன் இணைந்து சவூதி அரேபியாவின் தேசிய போட்டித்திறன் மையம் (NCC) அறிவித்தது. இந்த அறிவிப்பு Washington D.C.ல் வெளியிடப்பட்டது.
புதிய அறிவு மையம் சவுதி சீர்திருத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் உலகளாவிய போட்டித்தன்மை ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கும் ஒரு மையமாகச் செயல்படும். நாட்டின் சீர்திருத்த வெற்றிகளையும், உலக வங்கியின் விரிவான நிபுணத்துவத்தையும் பயன்படுத்தி மற்ற நாடுகளின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஆதரவளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
முக்கிய துறைகளில் வணிக நடவடிக்கைகளை எளிதாக்குவதிலும் மற்றும் அரசாங்க அமைப்புகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் அடையப்பட்ட 800 க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை ஒருங்கிணைப்பதிலும் மையம் கவனம் செலுத்துகிறது.
சவூதி வர்த்தக அமைச்சரும் NCC தலைவருமான டாக்டர் மஜித் அல்-கசாபி உலக வங்கி அதிகாரிகளைச் சந்தித்து, வர்த்தக நடைமுறைகளை எளிதாக்குவது மற்றும் நாட்டில் வணிக சூழலை மேம்படுத்துவது குறித்து விவாதித்தார்.





