80 சர்வதேச சுகாதாரத் தரங்களை வடமேற்கு சவூதி அரேபியாவில் உள்ள தபூக் நகரம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ததை அடுத்து,”ஆரோக்கியமான நகரம்” என உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பைப் பெற்ற மற்ற 14 சவூதி நகரங்களுடன் தபூக் நகரமும் இணைத்துள்ளது.
ஆரோக்கியமான சமூகங்களை வளர்ப்பதற்கும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சவூதி தலைமையின் அர்ப்பணிப்பை இந்த மைல்கல் குறிக்கிறது என்று சவுதி சுகாதார அமைச்சர் ஃபஹத் அல்-ஜலாஜெல் கூறினார்.
சுகாதார அமைச்சகத்தின் கடுமையான நியமங்களைப் பூர்த்தி செய்வதற்கு திறம்பட ஒத்துழைத்த அரசாங்க நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். சுற்றுச்சூழல் சுகாதாரம், மருத்துவ சேவைகள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றில் மேம்பாடுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறையை அமைச்சர் பரிந்துரைத்தார்.





