50 வயதான பாகிஸ்தானிய பயணி ஒருவருக்கு உம்ரா செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டது. மக்காவில் உள்ள கிங் அப்துல்லா மெடிக்கல் சிட்டியில் உள்ள மருத்துவக் குழுவினர் கடுமையான நெஞ்சுவலியால் அவதிப்பட்ட பயணியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டு 40 நிமிடங்களில் அவரது உயிரைக் காப்பாற்றினர். முதலில் அல்-ஹராம் அவசர உதவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் கிங் அப்துல்லா மெடிக்கல் சிட்டிக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஆஞ்சியோ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இதயத்தில் ஸ்டென்ட்கள் வெற்றிகரமாகப் பொறுத்தபட்டது.





