வெளிநாட்டில் இருந்து வரும் உம்ரா பயணிகளுக்குத் துல் கதா 15ஆம் தேதி விசா காலாவதிக்கான கடைசி நாள் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது. உம்ரா விசா காலாவதி தேதி துல் துல் கதா 15 வரை நீட்டிக்கப்படுவதால், உலகம் முழுவதிலுமிருந்து வருடாந்திர ஹஜ் பயணத்திற்காக வரும் ஹஜ் பயணிகள் மக்கா மற்றும் மதீனாவுக்குச் செல்வதற்கு வசதியாக இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த தேதியிலிருந்து முன்னர் அங்கீகரிக்கப்பட்ட செல்லுபடியாகும் காலத்திற்குப் பதிலாக, மூன்று மாத உம்ரா விசாவின் செல்லுபடியாகும் காலம் அது வழங்கப்பட்ட நாளிலிருந்து தொடங்கும். முன்னதாக அறிவிக்கப்பட்ட துல் கதா 29 காலாவதி தேதியை விட இரண்டு வாரங்கள் (14 நாட்கள்) முன்னதாகத் துல் கதா 15 தேதி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.





