ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம் (KAIA) விமான நிலையத்திற்குள் ஜம்ஜம் தண்ணீரை விற்பனை செய்ய 4 அரங்குகளை ஒதுக்கியுள்ளது.
சர்வதேச விமானங்கள்மூலம் பயணம் செய்யும் ஹஜ் பயணிகள் வடக்கு பகுதியின் வெளிப்புற வாயிலிலிருந்து ஜம்ம் தண்ணீரை வாங்கலாம் என்று KAIA தெரிவித்துள்ளது.
கூடுதலாக, ஜம்ஜம் தண்ணீரை ஹால் எண் 1ல் உள்ள ஹால் A உட்புறம், கேட் B2,வெளி கேட் C2 ஆகிய 3 இடங்களில் இருந்தும் வாங்கலாம்.
மேலும் ஹஜ் பயணிகள் தங்களுடன் அதிகபட்சமாக 1 ஐந்து லிட்டர் பாட்டில் Zamzam தண்ணீரை மட்டுமே எடுத்துச் செல்ல KAIA நிர்ணயித்துள்ளது.