Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் Wollongong பல்கலைக்கழக கிளைகளை நிறுவ முதலீட்டு உரிமத்தை வழங்கும் சவூதி அரேபியா.

Wollongong பல்கலைக்கழக கிளைகளை நிறுவ முதலீட்டு உரிமத்தை வழங்கும் சவூதி அரேபியா.

160
0

மனித திறன் முன்முயற்சியின் (HCI) ஒரு பகுதியாகச் சவூதி அரேபியாவில் தன் கிளையை நிறுவ ஆஸ்திரேலியாவின் Wollongong பல்கலைக்கழகத்திற்கு முதலீட்டு உரிமம் வழங்குவதாகச் சவூதி கல்வி மற்றும் முதலீட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தச் செயல்பாடு உயர்கல்வியின் பல்வேறு நிலைகளில் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியை வழங்குவதில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

கல்வி மற்றும் பயிற்சியில் உயர்தர நிபுணத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து சவூதி விஷன் 2030 இன் நோக்கங்களுடன் இந்த முயற்சி இணைந்துள்ளது. 2030க்குள் உயர்கல்வியில் தனியார் துறையின் பங்களிப்பை மேம்படுத்துவது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

Wollongong பல்கலைக்கழகம் 2024 QS World Index இன் படி உலக அளவில் முதல் 1% பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் சிறந்த நவீன பல்கலைக்கழகங்களில் 14வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!