சவூதியில் தடைசெய்யப்பட்டுள்ள App களை பயன்படுத்துவதற்கு அல்லது தடைசெய்யப்பட்டுள்ள இணையதளத்தை பார்வையிடுவதற்கு பலர் VPN செயலியை உபயோகப்படுத்துகின்றனர்
ஆனால் சமீப காலமாக உலகெங்கிலும் உள்ள குற்றவியல் குழுக்கள் மற்றும் நெட்வொர்க்குகள் பயனர்களின் தனிப்பட்ட தரவு மற்றும் பயனர்களின் mobile லில் உள்ள புகைப்படங்களை VPN app மூலம் திருடுகின்றனர். அந்தரங்க ரகசியங்களைப் பொதுவெளியில் வெளியிடுவோம் என மிரட்டிப் பெரும் தொகையைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர்.
சவூதி அரேபியாவில் ஏற்கனவே VPN செயலி தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகவே, அவற்றை மீறிப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு மில்லியன் ரியால்கள் மற்றும் ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டும் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





