ஜெத்தாஹ் மாநகரில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறையில் சேவையாற்றி வருகின்ற TAJ பாலி கிளினிக், ஜித்தா நகரின் உள்கட்டமைப்பு சீரமைப்பு பணிக்காக நடந்த கட்டிட இடிப்பாட்டிற்கு பின் புதுப்பொலிவுடன் மேலும் பல மருத்துவ சேவைகளுடன் குழைல் சவுத் மால் வணிக வளாகத்தில் இடம் மாற்றப் பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய மக்கள் அதிகம் பயனடைந்த மருத்துவமனை மீண்டும் செயல்பட துவங்கி இருப்பதை வரவேற்பதாக தமிழ் மக்கள் கூறினர்.
மேலும் மருத்துவமனையில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மருத்துவர்களும், உதவியாளர்களும் அதிக அளவிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும் பணி புரிகின்றனர்.
இந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவரும், தலை சிறந்த தமிழ் மருத்துவருமான டாக்டர் முஹம்மது அஜ்மல் ஹுசைன் அவர்கள் நம் செய்தியாளரை சந்தித்த போது
மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் குறித்து விரிவான விளக்கங்களை கொடுத்தார். இவர் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் கூறுகையில் சவூதி தமிழ் கலாச்சார மையம் அமைப்புடன் இணைந்து சவூதி தமிழ் மீடியாவின் ஆதரவுடன் இலவச மருத்துவ முகாம்களை மருத்துவமனை வளாகத்திலும், தொழிலாளர்கள் அதிகம் தங்கி இருக்கும் கேம்ப்களிலும் சேவை செய்ய ஆயத்தமாக இருப்பதாகவும், அனைத்து காப்பீடு அட்டைகளும் செல்லுபடி ஆகும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.
மருத்துவமனையின் நிர்வாக மேற்பர்வையாளர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல்லாஹ் சாலேஹ் அல் ஷம்ராணி கூறுகையில் இந்திய மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் அதிகம் வேலை செய்யும் மருத்துவமனையின் சேவைகள் தடைபட்டுவிடக் கூடாது என மிக துரிதகதியில் இந்த இடத்தை தேர்வு செய்து ஒன்னரை மாதங்களில் மீண்டும் செயல்பட அனைத்து வேலைகளையும் செய்து முடித்தோம் என்றும் இந்திய மக்களுக்கும், எளிய மக்களுக்கும் எந்நேரமும் உதவ தயார் என்றும் கூறினார்.
மருத்துவமனையின் மேலாளர் கேரளாவைச் சேர்ந்த ஹம்ஸா அவர்கள் மருத்துவமனையின் அனைத்து வசதிகளையும் விளக்கமாக கூறியதுடன் எதிர்காலத் திட்டங்களையும் விவரித்தார்.