Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் Sports Boulevard அதிவேக சைக்கிள் ஓட்டுதல் அனுபவமான RIYDE ஐ அறிமுகப்படுத்துகிறது.

Sports Boulevard அதிவேக சைக்கிள் ஓட்டுதல் அனுபவமான RIYDE ஐ அறிமுகப்படுத்துகிறது.

245
0

ஸ்போர்ட்ஸ் பவுல்வர்டு அறக்கட்டளை, உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்களுடன் இணைந்து, ரியாத் முழுவதும் உடற்பயிற்சி நிலைகளை உயர்த்த வடிவமைக்கப்பட்ட புதுமையான சைக்கிள் ஓட்டுதல் அனுபவமான RIYDE ஐ வெளியிட்டது.

Sports Boulevard திட்டத்தின் கீழ் 220km சைக்கிளிங் பாதைகளை உருவாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக RIYDE அறிமுகப்படுத்தப்பட்டு Sports Boulevard கட்டுமான கட்டத்தில் தலைநகரில் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

RIYDE அனுபவமானது 5.24 கிமீ விர்ச்சுவல் பாதையைக் கொண்டு வெவ்வேறு உடற்பயிற்சி நிலைகளுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு 10-15 நிமிட சைக்கிள் பயணத்தை வழங்குவதோடு அடிமட்ட விளையாட்டுகளை ஊக்குவித்து ரியாத்தில் வசிப்பவர்களுக்கு உடற்பயிற்சிக்கான அணுகலை அதிகரிக்க பங்களிக்கும் என ஸ்போர்ட்ஸ் பவுல்வர்டு அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய்ன் மெக்கிவர்ன் வலியுறுத்தினார்.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஆதரவுடன் இந்தத் திட்டம் 135 கி.மீ.க்கு மேல் பரவிப் பாதசாரிகள், சைக்கிள் ஓட்டுபவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் குதிரை சவாரி செய்பவர்களுக்குப் பாதுகாப்பான பசுமை வழிகள் நெட்வொர்க் மூலம் வாடி ஹனிஃபா மற்றும் வாடி அல் சுலையை இணைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!