சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான சின்னத்தை சவூதி அரேபியா வெளியிட்டுள்ளது.
சவூதி மற்றும் அரேபிய முஸ்லீம் பெண் விண்வெளி வீராங்கனையான ராயனா பெர்னாவி மற்றும் அலி அல்-கர்னி – சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் சவூதி விண்வெளி வீரர்கள் ஆவார்கள். விண்வெளி வீரர்கள் மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சிகள் மூலம் மக்களை மேம்படுத்துதல், கிரகத்தைப் பாதுகாத்தல் நாட்டின் அறிவியல் பணியின் உன்னத இலக்குகள் ஆகியவற்றை லோகோ உள்ளடக்கியுள்ளது.
அதன்படி விண்வெளி குழுவினரின் சீருடையில் லோகோ பொறிக்கப்படும். இந்த லோகோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், வட்ட வடிவில் நாட்டின் கொடியும், நடுவில், இஸ்லாத்தின் பதாகையைக் குறிக்கும் பச்சைக் கொடியும் இடம்பெற்றுள்ளன. தூய்மையின் சின்னமான வெள்ளை நிறம் மற்றும் அதில் இரண்டு ஷஹாதாக்கள் எழுதப்பட்டுள்ளது. மேலும் பழமையான சவூதி பாரம்பரியத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றாக உருவான வாள் பொறிக்கப்பட்டுள்ளது.