சவூதி அரேபிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) தலைவராக யாசர் அல்மிசெஹால் 2023 முதல் 2027 வரையிலான அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
SAFF துணைத் தலைவராக லாமியா பின்ட் பாஹியன் பணியாற்றுவார். இந்த பதவியை வகிக்கும் முதல் சவூதி பெண் இவர் ஆவார். கலீத் அல்-துபைட்டி, நைம் அல்-பக்ர், நாஜிஹ் அல்-நஸ்ர், கலீத் அல்-முக்ரின், அலி அல்-ஷுவைலன், மொயீத் அல்-ஷெஹ்ரி, துர்கி அல்-சுல்தான், அப்துல் அஜிஸ் அல்-அஃபாலெக் மற்றும் அப்துல்லா ஹம்மாத் ஆகியோர் கூட்டமைப்பின் இயக்குநர்கள் குழுவில்
அடங்குவர்.
பொதுச் சபையின் உறுப்பினர்களுக்கு அல்மிசெஹால் தனது நன்றி தெரிவித்தார்.
FIFA கவுன்சில் உறுப்பினராக இருந்த அல்மிசெஹால், ஜூன் 2019 இல் SAFF தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சவூதி கால்பந்தில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்த பெருமைக்குரியவர். அவரது பதவிக்காலத்தில் , சவூதி தேசிய கால்பந்து அணி 2022 FIFA கத்தார் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் சவூதி அரேபிய அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. முதல் சவூதி பெண்கள் அணியை நிறுவியதிலும், முதல் சவூதி பெண்கள் தொழில்முறை லீக்கை தொடங்குவதிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.