Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் REEF திட்டம் மூலம் தொழிலாளர் சந்தையில் கிராமப்புற பெண்களின் ஆதரவிற்கு முக்கிய பங்களிப்பு.

REEF திட்டம் மூலம் தொழிலாளர் சந்தையில் கிராமப்புற பெண்களின் ஆதரவிற்கு முக்கிய பங்களிப்பு.

121
0

2023 ஆம் ஆண்டில் கிராமப்புற பெண்களின் பங்கேற்பு தொழிலாளர் சந்தையில் சுமார் 50,000 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதில் REEF திட்டம் பங்களித்துள்ளது எனச் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய துணை அமைச்சர் பொறியாளர் மன்சூர் அல்-முஷைதி உறுதிப்படுத்தினார்.

ரியாத்தில் உள்ள MEWA தலைமையகத்தில் “சவூதி ரீஃப் திட்டத்தின் தாக்கம்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மின்னணு வணிக நுண்ணறிவு தளம் (BI-Power) மூலம் விவசாய மானியக் குழுவை அறிமுகப்படுத்தும்போது அல்-முஷைதி இந்த அறிக்கைகளை வெளியிட்டார். இந்தத் திட்டம் கால்நடை பண்ணை, கோழி உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்புத் துறை உட்பட மூன்று முக்கிய துறைகளை உள்ளடக்கியது.

சவூதி விஷன் 2030 இன் நோக்கங்களுக்கு ஏற்ப, பல்வேறு துறைகளில் டிஜிட்டல் மாற்றத்தின் பயன்பாட்டில் MEWA தொடர்ந்து இ-தளத்தை அறிமுகப்படுத்தும் என்று அல்-முஷைதி கூறினார்.

இத்திட்டம் உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய தன்னிறைவுக்கு பங்களித்துள்ளதாக ரீஃப் திட்டத்தின் பொதுச்செயலாளர பொறியாளர் கஜான் பக்ரி தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் உற்பத்தி அளவு 350,537 ஆயிரம் டன்களை எட்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது சிறு விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் பங்களித்துள்ளது.

இந்த ஆண்டு 150,000 ஹெக்டேர் பரப்பளவில் 18 மரக்கன்றுகளை நடுவதற்கான இலக்கு நிர்ணயித்ததன் காரணமாக, சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு ரீஃப் திட்டம் பங்களித்துள்ளது. REEF திட்டம் சிறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும், விவசாய கிராமப்புறத் துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!