Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் PIF, SABIC மற்றும் Rajhi Invest சவூதி அரேபிய எஃகுத் தொழில் குறித்த முக்கிய ஒப்பந்தம்...

PIF, SABIC மற்றும் Rajhi Invest சவூதி அரேபிய எஃகுத் தொழில் குறித்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

248
0

சவூதி அரேபிய எஃகுத் தொழிலின் குறிப்பிடத் தக்க வளர்ச்சியில், பொது முதலீட்டு நிதியம் (PIF) சவூதி அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனியின் (HADEED) 100% பங்குகளைச் சவூதி அடிப்படை தொழில் நிறுவனத்திடம்(SABIC) இருந்து வாங்குவதற்கான பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளது.

HADEED, அல்ராஜி ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் (Rajhi Steel) 100% பங்குகளை முகமது அப்துல் அஜிஸ் அல்ராஜி & சன்ஸ் முதலீட்டு நிறுவனத்திடமிருந்து (Rajhi Invest) வாங்கும் இந்தப் பரிமாற்றம் ஹதீதில் புதிதாக வெளியிடப்பட்ட பங்குகளை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.

PIF மற்றும் Rajhi Invest ஆகிய இரண்டிற்கும் சவுதி அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனியின் (HADEED) இறுதி பங்குகள் ஒப்பந்தங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள படி தீர்மானிக்கப்படும்.

இந்தப் பரிவர்த்தனைகள் சவூதி அரேபியாவின் தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்தி, எஃகுக்கான உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்து அதன் மூலம் சவுதி அரேபியாவின் எஃகு உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும்.

இந்தப் பரிவர்த்தனைகள் HADEED மற்றும் Rajhi Invest நிறுவனங்களை ஒன்றிணைத்து, அவர்களின் உலகத் தரம் வாய்ந்த எஃகு ஆலைகள் மற்றும் எஃகுத் தொழிலில் இணையற்ற நிபுணத்துவத்தை மேம்படுத்தி உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல ஆண்டுகளாக, சவூதி அரேபியாவின் கட்டுமானத் துறை, நகர்ப்புற மற்றும் சிவில் வளர்ச்சி மற்றும் SABIC இன் எழுச்சி மற்றும் வளர்ச்சிக்கு HADEED குறிப்பிடத் தக்க பங்களிப்பை அளித்துள்ளதாக SABIC இன் CEO அப்துல்ரஹ்மான் அல்-ஃபகீஹ் கூறியுள்ளார்.

இந்தப் பரிவர்த்தனைகள் PIF திட்டத்துடன் தடையின்றி செயல்பட்டு உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறை உட்பட 13 துறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!