Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் OPEC இன் JMMC உயர் இணக்க நிலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

OPEC இன் JMMC உயர் இணக்க நிலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

150
0

OPEC கூட்டு கண்காணிப்பு குழுவின் (JMMC) 52 வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்று JMMC நவம்பர் மற்றும் டிசம்பர் 2023க்கான கச்சா எண்ணெய் உற்பத்தித் தரவை மதிப்பாய்வு செய்தது.

இதில் முக்கியம்சமாக OPEC மற்றும் OPEC அல்லாத நாடுகளின் ஒத்துழைப்பிற்கு (DoC) பங்கேற்பதன் மூலம் நிரூபிக்கப்பட்ட பாராட்டுக்குரிய உயர் இணக்க நிலைகள் சுட்டிக்காட்டப்பட்டது.

ஜூன் 4, 2023 அன்று நடைபெற்ற 35 வது OPEC மற்றும் OPEC அல்லாத அமைச்சர்கள் கூட்டத்தில் (ONOMM) நிறுவப்பட்ட உற்பத்தி சரிசெய்தல் மற்றும் சில பங்கேற்பு OPEC மற்றும் OPEC அல்லாத நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட துணை தன்னார்வ உற்பத்தி சரிசெய்தல்களை இந்த நாடுகள் தொடர்ந்து கடைப்பிடித்தன.

OPEC மற்றும் பங்குபெறும் OPEC அல்லாத எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கிடையே உள்ள அசைக்க முடியாத ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைக் குழு எடுத்துரைத்து, உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உறுதியை சுட்டிக்காட்டியது.

மேலும் JMMC 53வது கூட்டம், ஏப்ரல் 3, 2024 அன்று திட்டமிடப்பட்டு குழுவானது சமநிலையான ஒழுங்குபடுத்தப்பட்ட எண்ணெய் சந்தையை உறுதி செய்வதற்கான அதன் பணிக்கு அர்ப்பணிப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!